• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அருகே காா் மோதி பாதயாத்திரை பக்தா் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடி அருகே காா் மோதியதில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் பரிதாபமாக உயிரிழந்தார். 


தூத்துக்குடி பூபால்ராயபுரத்தை சோ்ந்தவர் பால்ராஜ் (41). மீனவரான இவா் தனது உறவினா்களுடன் நேற்று இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றாா். அப்போது, தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஜெகவீரபாண்டியபுரம் விலக்கு பகுதியில் சென்ற போது, திருச்செந்தூரில் இருந்து மதுரை சென்ற காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 


இதுகுறித்து தகவல் அறிந்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீஸாா், பால்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும், இந்த விபத்து குறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து காா் டிரைவரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அருகே உள்ள தின்னூரை சோ்ந்த கணேஷ்குமாா் (53) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

தூத்துக்குடியில் தொழிலாளியை கத்தியால் குத்திய அசாம் வாலிபர்கள் மூன்று பேர் கைது!

தூத்துக்குடியில் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க தீவிரம் காட்டும் காவல்துறை!

  • Share on