• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தொழிலாளியை கத்தியால் குத்திய அசாம் வாலிபர்கள் மூன்று பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் தொழிலாளியை கத்தியால் குத்திய அசாம் வாலிபர்கள் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


அசாம் மாநிலம் பக்சா மாவட்டம் தமுல்புர் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் முண்டா ( 24 ). தூத்துக்குடி மடத்தூரில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார்.


அதே பகுதியில் அசாமை சேர்ந்த காலிப் உசேன் ( 24 ), அவரது தம்பி இக்ரமுல் உசேன் ( 21 ), இதுல் அசார் ( 21 )  ஆகியோரும்  தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் குடிபோதையில் அஜய் முண்டாவை,  காலிப் உசேன் உள்ளிட்ட மூன்று பேரும் அவதூறாக பேசியுள்ளனர். இது குறித்து அஜய் முண்டா 3 பேரின் பெற்றோரிடமும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காலிப் உசேன், இக்ரமுல் உசேன், இதுல் அசார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அஜய் முண்டாவை சரமாரியாக தாக்கியதுடன் கத்தியால் குத்தியுள்ளனர்.


இதில் பலத்த காயமடைந்த அஜய் முண்டா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காலிப் உசேன், இதுல் அசார், இக்ரமுல் உசேன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Share on

பாஞ்சாலங்குறிச்சியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு!

தூத்துக்குடி அருகே காா் மோதி பாதயாத்திரை பக்தா் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on