
பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு வீட்டின் பூஜை அறையில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையின் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தெருவில் சரவணகுமார் என்பது என்பவரது வீட்டின் பூஜையில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை அடுத்து அவ் வீட்டார், ஒட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் அங்கு வந்து பூஜை அறையில் பதுங்கி இருந்த பாம்பினை லாவமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.