முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை (புதன்கிழமை) தூத்துக்குடி வருகை தர உள்ள நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழகங்களின் சார்பில் சிறப்பாக வரவேற்பது, நிகழ்ச்சி ஏற்பாடு குறித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (16.02.2021) காலை கோவில்பட்டியில் வைத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.