• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இயங்கும் ஸ்பா, மசாஜ் சென்டர்கள், அழகு நிலையங்களுக்கு வருகிறது கிடுக்குப்பிடி!

  • Share on

உரிய அனுமதியின்றியும், சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடும் ஸ்பா, மசாஜ் சென்டர்கள் மற்றும் அழகு நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலையில் இன்று காலை நடந்தது. கூட்டம் தொடங்கியது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. 


பின்னர் கூட்டத்தில், "51 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், எதிர்கட்சி மாமன்ற கொறடாவுமான அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசுகையில்":-


தூத்துக்குடி மாநகராட்சி 6 வது தீர்மானம் தொழில் உரிமம் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிடக்கோரி அந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பை பதிவை செய்கிறேன். மேலும், தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல்  ஸ்பாக்கள், பியூட்டி பார்லர், மசாஜ் சென்டர்கள் இயங்குவதோடு, அங்கு பல்வேறு சமூக விரோத செயல் நடைபெறுகிறது. ஆகவே, அதனை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தூத்துக்குடி மாநகராட்சி 51வது வார்டு பகுதியில் மழை நீர் பாதிக்காத வண்ணம் மழை நீர் வடிகால் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை வைத்தார்.


இதற்கு பதில் அளித்து மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்:- 


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உரிய அனுமதியின்றியும், சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடும் ஸ்பா, மசாஜ் சென்டர்கள் மற்றும் அழகு நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

  • Share on

எட்டயபுரம் அருகே புகையிலை பொருட்கள் கடத்தல் : 2 பேர் கைது

தூத்துக்குடி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயண திட்டத்தின் முழு விவரம்!

  • Share on