• vilasalnews@gmail.com

ஆங்கிலேயரை வென்ற இந்தியாவின் முதல் ராணிக்கு தூத்துக்குடியில் தவெக மரியாதை!

  • Share on

இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியாரின் 228வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.


வேலு நாச்சியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு தலைவர் விஜய் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இது குறித்து தவெகதலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


அதில், "மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர், இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி, அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி, எம் கழகத்தின் கொள்கைத் தலைவர், வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


அதே போல, தூத்துக்குடியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வேலுநாச்சியாரின் திருவுருவப்படத்திற்கு தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மாலை அணிவித்து வீரவணக்கம் முழங்கி மரியாதை  செலுத்தினார். இதில் ஏராளமான தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


  • Share on

இதாம்ல எங்க ஊர்... பேதமின்றி கூடி மகிழ்ந்த தூத்துக்குடி கேரல்ஸ்!

தூத்துக்குடி வரும் தமிழக முதல்வர் : முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

  • Share on