• vilasalnews@gmail.com

இதாம்ல எங்க ஊர்... பேதமின்றி கூடி மகிழ்ந்த தூத்துக்குடி கேரல்ஸ்!

  • Share on

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்மஸ் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் 25 ஆம்  தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.


உலகமெங்கும் கொண்டாடப்படும் இந்த கிறிஸ்மஸ் பண்டிகையானது ஒவ்வொரு பகுதியிலும் தனித்தன்மையுடன் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பல விதமாக இருந்தாலும் இவற்றில் பொதுவாகவும் சிறப்பாகவும் அமைவது கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் கேரல்ஸ் பவனி தான்.


தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று கேரல்ஸ் ஊர்வலமானது வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் வகையிலான பாடல்கள் பாடி, வீடுவீடாகச் சென்று சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.


இந்தநிலையில், கேரல்ஸ் நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவதைப் போல, இந்த ஆண்டும் மிகவும் பிரம்மாண்டமான கொண்டாட்டமாக தூத்துக்குடியில் நேற்று நடைபெற்றது. வெளிநாடுகளில் நடைபெறும் கார்னிவல் கொண்டாட்டம் போலக் கோலாகலமாக இந்த கேரல்ஸ் நடைபெற்றது.


இதற்காகப் பல்வேறு கருத்துக்களைத் தாங்கியபடி விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஒன்பது வாகனங்கள் இந்த கேரல்ஸ் அணிவகுப்பைச் சிறப்பாக்கியது. மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கேரல்ஸ் பவனியில் கலந்து கொண்டனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் அதிரவைக்கும் டி.ஜே இசையுடன் கோலாகலமாக இந்த கேரல்ஸ் பவனி நடைபெற்றது.


மேலும், கிறிஸ்துமஸ் தாத்தா, தேவதூதர்கள், பேட்மேன் மற்றும் அவெஞ்சர்ஸ், மிக்கி மவுஸ், ஜோக்கர் மற்றும் பல வித முகமூடிகளை அணிந்து, வித்தியாசமான காஸ்ட்யூம்களில் இளைஞர்கள் முதல் பலரும் குடும்பத்தோடு இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் இந்த கேரல்ஸ் பவனி கார்னிவல் நிகழ்ச்சி போலக் காட்சியளித்தது. இந்த பிரம்மாண்ட கேரல்ஸ் பவனியால் தூத்துக்குடி நகரே விழாக்கோலம் பூண்டிருந்தது.


மேலும், இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துவர்களை தாண்டி அனைத்து சமூக, சமயம் சார்ந்த மக்களுக்கும் கலந்து கொண்டு கொண்டாடியது தான் தூத்துக்குடி கேரல்ஸ்ன் தனிச்சிறப்பு. இதாம்ல எங்க ஊர் என தூத்துக்குடி காரர்கள் காலரை தூக்கிவிடுகிறார்கள்.

  • Share on

தூத்துக்குடியில் விபத்து... திருப்பூரைச் சேர்ந்த 3 பேர் பலி; 2 பேர் படுகாயம்!

ஆங்கிலேயரை வென்ற இந்தியாவின் முதல் ராணிக்கு தூத்துக்குடியில் தவெக மரியாதை!

  • Share on