தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஓய்வுதியர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் இன்று நடைபெற்றது.
ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற இரவுக்காவலர் முதல் கூடுதல் இயக்குனர் வரையிலான அனைத்து நிலை ஓய்வூதியர்களின் நலன் காத்திட ஏற்படுத்தபட்ட, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் இன்று (16.02.2021) செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை சாலையில் உள்ள அரசு ஊழியர் சங்கத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட தலைவர் கோமதி சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் தங்கவேல் வரவேற்பு ஆற்றினார். மாநில துணை தலைவர் வெங்கடேசன் வாழ்த்தி பேசினார்.
பின்னர், கோரிகைகளான புதிய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் முறைப்படுத்துதல், மத்திய அரசு வழங்குவது போல் மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850/க்கும் பதிலாக ரூ.9000/ வழங்க கோருதல், இயற்கை எய்தும் ஓய்வூதியர்களுக்கு ரூ.50,000/க்கு பதிலாக அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு வழங்குவதை போல் ரூ.3 லட்சம் வழங்கக் கோருதல் என கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
கூட்டத்தில் மாநில துணை தலைவர் சுந்தரமூர்த்தி நாயனார், மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி,மாவட்ட செயலாளர் திரவியம்,மாவட்ட பொருளாளர் சமஸ்தானம் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.