
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடியில் தெற்கு காவல் நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர துணைச் செயலாளர் கீதா முருகேசன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மேகநாதன், சுரேஷ் குமார், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், நாராயணன், வட்டச் செயலாளர்கள் சிங்கராஜ், பொன்ராஜ், கருப்பசாமி, டென்சிங், சுரேஷ், பாலு, சதீஷ், செல்வராஜ், மாமன்ற உறுப்பினர்கள் தெய்வேந்திரன், கண்ணன், விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வின், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அருணா தேவி, மாநகர மாணவர் அணி துணை அமைப்பாளர் சத்யா, மாநகர மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் பெல்லா, பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, திரேஸ்பரம் பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.