
தூத்துக்குடியில் பெரியாரின் 51 வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள பெரியாரின் திருஉருவச்சிலைக்கு, தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் அக்கட்சியினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு பெரியார் சிலை முன்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மகளிர் அணியினர், நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து காெண்டனர்.