• vilasalnews@gmail.com

பயிா் காப்பீட்டுத் தொகை பெற போராட்டம் : கரிசல் பூமி விவசாயிகள் நிலை பரிதாபம்!

  • Share on

பயிா் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி புதூரில் விவசாயிகள் சார்பில் இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி பயிா்களுக்கு 2023-2024 ஆண்டுக்கான நிலுவையில் உள்ள காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாய நிலங்களை சேதப்படுத்தியும், விவசாயிகள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பன்றிகளை வேட்டை தடுப்பு குழுக்கள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.


மிளகாய், மல்லி, வெங்காயம், கம்பு, சோளம், மக்காசோளம், சூரியகாந்தி, உளுந்து, பாசி, போன்ற அனைத்து விளை பொருள்களுக்கும் தமிழக அரசே குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதூர் பேருந்து நிலையம் முன்பு கடந்த 11.12.2024 மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. 


விளாத்திகுளம் வட்டாட்சியர் மற்றும் புதூர் தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் 20.12.2024 அன்று  பயிர் காப்பீட்டுத் தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஏறும் என உறுதியளித்தனர். இதையடுத்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, 19.12.2024 அன்று தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்பு இக்கோ டோக்கியோ கம்பெனி முதன்மை அதிகாரி 21.12.2024 அன்று மாலை பயிர் காப்பீட்டுத் தொகையானது விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால் இதுவரை எந்தத் தொகையும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வர வைக்கப்படவில்லையாம்.


எனவே, இதைக் கண்டித்து 24.12.2024 இன்று புதூர் பேருந்து நிலையம் முன்பு வியாபாரிகள் சங்கத்தின் ஆதரவுடன் புதூர் முழுவதும் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்தனர்.


இந்த நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளிடம் விளாத்திகுளம் வட்டாட்சியர், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகள் தரப்பில் மிளகாய் உள்ளி மல்லி உள்ளிட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு மிளகாய் மற்றும் மல்லி பயிருக்கான காப்பீடு இழப்பீடு ரூபாய் 32 கோடி ஒதுக்கப்பட்டதாகவும் இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொள்ள மறுத்த விவசாயிகள் இன்சூரன்ஸ் கம்பெனி இது குறித்து பதில் சொல்ல கூறினர். அந்த அடிப்படையில் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சென்னை  இயக்குனர் அலுவலகத்தில் பேசியதன் அடிப்படையில் 27.12. 24 தேதிக்குள் இன்சூரன்ஸ் விடுவிக்கப்படும் எனவும்,  பயிருக்கு ரூபாய் 14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவை ஒரு வாரம் காலத்துக்கு பின் ஏற்றப்படும் எனவும் தெரிவித்தனர். இந்த அடிப்படையில் 27.12 .24 தேதிக்குள் இன்சூரன்ஸ் தொகை விடுவிக்கப்படவில்லை என்றால் டிசம்பர் 28 அன்று விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுடன் சமையல் செய்து சாப்பிட்டு குடியேறும் போராட்டம் நடத்தப்படும் எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • Share on

அடங்கல் வழங்க விவசாயிகளிடம் பணம் வசூல் : விஏஓ காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள மகிழ்வகம் மகளிர் நம்பிக்கையின் உறைவிடம் பற்றி தெரியுமா?

  • Share on