தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடைகளில் விற்பனை செய்ய சொல்லி மாமுல் கேட்டு மிரட்டுவதாக காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து அதன் மூலம் மாமுலை தனக்கு வழங்க வேண்டுமென வியாபாரிகளை பசுவந்தனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவீந்திரன் மற்றும் காவல்துறையினர் மிரட்டி வருவதாகவும், இவ்வாறு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யாத வியாபாரிகளை பொய் வழக்கு போட்டு மிரட்டி வருவதாகவும் கூறி,
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீலாமங்கலம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள், கிராம மக்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் இசக்கி ராஜா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.