தூத்துக்குடி மாவட்டம், அனவரதநல்லூர் கிராமத்தில் வாலிபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், அனவரதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமாடன் மகராஜன் (35) இவர். அங்குள்ள ரேஷன் கடையின் பின்புறம், தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், அப்பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் முத்துக்குமார் (19) என்பவரை கைது செய்துள்ளனர். இதுவரும் நேற்று இரவு மது அருந்துபோது ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது. சம்பவ இடத்தை தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுதிர் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை சம்பவம் அப்பகுயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.