• vilasalnews@gmail.com

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இவர் பெயர் வையுங்கள் - கோரிக்கை வைத்த வாரிசு!

  • Share on

பாண்டியாபதி 16 வது மன்னராக பொறுப்பேற்றவர் தென் காப்ரியேல் தெக்குருஸ் பரத வர்ம பாண்டியாபதி தேர்மாறன். இவர் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் நெருங்கிய நண்பராக விளங்கியுள்ளார்.


வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிட்ட பிறகு, அவரது சகோதரரான ஊமைத்துரையை தூத்துக்குடி அருகே உள்ள பாண்டியன் தீவில் பாதுகாத்தவர் தான் இந்த தேர்மாறன் மன்னன். சுதந்திர போராட்டத்தின் போது, வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்களுடன் இணைந்து போராடியவர் முத்துக்குளித்துறை மன்னர் தொன் கபிரியேல் தெக்குரூஸ். இவர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கப்பல், பொருளாதார உதவியும், சிறையில் இருந்து தப்பிய ஊமைத்துரையை அன்றைய பாண்டியன் தீவில் பாதுகாப்பாக வைத்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டை அமைக்கவும் உதவி உள்ளார்.


1801 ஆம் ஆண்டு காடல்குடியில் நடந்த புரட்சிப்படை ரகசிய கூட்டத்தில் பங்கேற்று, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தனக்கு சொந்தமான கப்பலில் இலங்கையில் இருந்து ஆயுதங்களை கொண்டு வந்தார். தொடர்ந்து நடந்த முதல்கட்ட போரில் ஆங்கிலேயர்களை தோல்வியுற செய்தனர். 2 ஆம்  கட்டமாக நடைபெற்ற போரில் பெரும்படையுடன் வந்த ஆங்கிலேயர்களிடம் தோல்வியும் அடைந்தனர். இதனால் தொன்கபிரியேல் தெக்குரூஸ் தலைமறைவானார். அதன்பிறகு தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்துக்கு தங்கத்தேர் செய்து கொடுத்தார். அதனால் இவரை பரதவ குல மக்கள் தேர்மாறான் என்றும் அழைக்கின்றனர். இவர் 1808 ஆம் ஆண்டு மணப்பாட்டில் காலமானார். அவரது உடல் தோனி மூலம் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு, கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


இந்த பகுதியில் உள்ள புனித லசால் பள்ளி நிர்வாகம் மைதானம் அமைத்து உள்ளது. இந்த நிலையில் மன்னர் தொன்கபிரியேல் தெக்குரூஸ் கல்லறை முறையாக பராமரிக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தேர்மாறன் கல்லறை மீட்பு குழு என்ற ஆரம்பிக்கப்பட்டு, தேர்மாறன் கல்லறை இடத்தை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த டிசம்பர் மாதத்தில் தேர்மாறனின் 272 வது ஜெயந்தி விழாவும் பரதவ குல மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள கல்லறையில் பாண்டியாபதி வாரிசு ஜோசப் லிகோரி அனஸ்தாசியுஸ் சந்திர மோத்தா இன்று மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு, பரதர் நல சங்க முன்னாள் தலைவர் பீட்டர் பெர்னான்டோ தலைமை வகித்தார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரவீன், தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் சேனாதிபதி சின்னத்தம்பி முன்னிலை வகித்தனர். பாத்திமா நகர் பங்குத்தந்தை அருட்திரு ஜேசுதாஸ் ஆசியுரை வழங்கினார்.


இவ்விழாவில், தேர்மாறன் கல்லறை மீட்பு குழு நிர்வாகிகள் அந்தோணிசாமி, இன்னாசி, பெல்லா, விஜயகுமார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரைட்டர், தமிழக மீனவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் கோல்டன் பரதர், தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகி செவனர், மணவை ரூஸ்வெல்ட், அமல் அரசு, இந்திய மீனவர் சங்க மாவட்ட செயலாளர் பிரசாத், பரதவர் முன்னேற்ற பேரவை பொதுச் செயலாளர் ரோக் பெர்னான்டோ, தமிழக மீனவ மக்கள் கட்சி மாநிலத் தலைவர் ராஜசேகர் பர்னாந்து, நிர்வாகிகள் தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெமி வி ராயர், தூத்துக்குடி மாவட்ட பிரதிநிதி குமார், பொதுக்குழு உறுப்பினர் ஞானராஜ் கோமஸ், ஊடகப்பிரிவு நிர்வாகி ராயர் பரதர், இந்தியர் மீனவர் சங்க மாவட்ட செயலாளர் பிரசாத், மாவட்ட தலைவர் ஜேசுராஜா, நிர்வாகிகள் சுமன், விக்னேஷ், நியூட்டன், அஸ்மிலன், அதிஷ்டன், பரதவர் முன்னேற்ற பேரவை மாவட்ட செயலாளர் வார்னர், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாலன், மாவட்ட துணைத் தலைவர் பிரேம் குமார் மற்றும் நரிப்பையூர், ரோச்மாநகர் பரதர் ஊர் கமிட்டி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டு மன்னர் தேர்மாறனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர்.


தொடர்ந்து மன்னரின் வாரிசுதாரர் ஜோசப் லிகோரி அனஸ்தாசியுஸ் சந்திர மோத்தா மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரவீன் ஆகியோர் பேசுகையில்:-


தூத்துக்குடியில் மன்னர் தேர்மாறன் கல்லறை உள்ள அதே இடத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைத்து, டிசம்பர் 13 ஆம் தேதி பிறந்த தினமாக அறிவித்து தேர்மாறனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.


தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சுதந்திர போராட்ட வீரர் தொன் கபிரியேல் தெக்குருஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன் என்கிற தேர்மாறன் பெயரை சூட்ட வேண்டும்.


மத்திய அரசு பாண்டியாபதி தேர்மாறன் நினைவாக தபால் தலை வெளியிட வேண்டும்.


தூத்துக்குடியில் பாண்டியாபதி தேமாறன் வாழ்ந்த பகுதியான கடற்கரை சாலைக்கு மன்னர் பாண்டியாபதி தேர்மாறன் சாலை என மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி பெயர் சூட்ட வேண்டும் என தெரிவித்தனர்.


  • Share on

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பு : எஸ்பி திடீர் உத்தரவு!

கஞ்சா வழக்கில் 2 இளைஞர்கள் கைது : பைக் பறிமுதல்!

  • Share on