ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், இளவேலங்கால் ஊராட்சி அயிரவன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள நீர்த்தேக்கத் தொட்டியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், யூனியன் ஆணையாளர் சசிகுமார், உதவி பொறியாளர் பாலநமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சாவித்திரி, அருண்குமார், ஊராட்சி செயலாளர் ராஜு, ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், அரசு ஒப்பந்ததாரர் ஜோசப், இளைஞரணி மணிகண்டன், சரவணகுமார், அலெக்ஸ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.