• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நாளை மறுநாள் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்!

  • Share on

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை மறுதினம் 23ஆம் தேதி நடைபெறும் என மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 29, 30 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். முதலமைச்சரின் நிகழ்ச்சிகளை சிறப்பிப்பதற்கும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காகவும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை மறுதினம் 23ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற உள்ளது.


இக்கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், சார் அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

  • Share on

விளாத்திகுளம் அருகே அரசு பேருந்து மீது லோடுவேன் மோதி விபத்து!

தூத்துக்குடி பிரபல ரவுடிக்கு ஆயுள் தண்டனை : மதுரை ஐகோர்ட் தீர்ப்பு!

  • Share on