விளாத்திகுளம் அருகே அரசு பேருந்து மீது லோடுவேன் மோதி விபத்து ஏற்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து இன்று விளாத்திகுளம் நோக்கி அரசு பேருந்து ஒன்று 5 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இப்பேருந்தை விளாத்திகுளத்தை சேர்ந்த ராஜாராம் (44) என்பவர் ஒட்டி வந்துள்ளார்.
அப்போது பேருந்து விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் - முத்துக்குமராபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லோடு வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், லோடு வேனை ஒட்டி வந்த ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆறைக்குளம் பகுதியை சேர்ந்த செல்வம் (40) என்பவருக்கு காயம் ஏற்பட்டு அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.