தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள செயல்முறை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் மழையின் காரணமாக 12.12.2024 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை ஈடு செய்திடும் பொருட்டு நாளை 21.11.2024 சனிக்கிழமை அன்று முழு வேலை நாளாக அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயல்முறைக் கடிதமானது தூத்துக்குடி, கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள இடைநிலை தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகளின் கல்வி அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.