தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி அரசு புறம்போக்கு நிலத்தில் 2சென்ட் ஆக்கிரமிப்பு கட்டிடம் முழுவதுமாக அகற்றப்பட்டது.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அரசு புறம்போக்கு நிலத்தில் அரசின் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டிய மாப்பிள்ளையூரணி கிராமத்தை சேர்ந்த செல்லச்சாமி மகன் சிவக்குமார் என்பவரின் கட்டடம் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு உத்தரவின் பேரில், வட்டாட்சியர் முரளிதரன் தலைமையில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுப்பையா, வருவாய் ஆய்வாளர் குமரன், கிராம நிர்வாக அலுவலர் அமலதாசன் மற்றும் தாளமுத்து நகர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்த 2சென்ட் கட்டிடம் முழுவதுமாக அகற்றப்பட்டது.