பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டி கட்டபொம்மன் நினைவுகோட்டைக்கு ஓராண்டு காலத்திற்க்கு அங்கு வரும் சுற்றுலா வாகனத்திற்கு நுழைவு கட்டணம் வசூலிப்பதற்க்கு பொது ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டி கட்டபொம்மன் நினைவுகோட்டைக்கு வரும் சுற்றுலா வாகனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரின் ஆணையின்படி, 01-01-2025 முதல் 31-12-2025 வரையிலான ஓராண்டு காலத்திற்க்கு அங்கு வரும் சுற்றுலா வாகனத்திற்கு நுழைவு கட்டணம் வசூலிப்பதற்க்கு பொது ஏலம் 20-12-2024 வெள்ளி கிழமை அன்று காலை 11.00 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஏலத்திற்க்கான நிபந்தனைகள் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக்கோட்டை வாகன வரி பொது ஏலத்திற்க்கான நிபந்தனைகள்
1. ஏலக்காலம் ஓராண்டு 01.01.2025 முதல் 31.12.2025 வரை ஆகும்.
2. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 5000/- (ரூபாய் ஐயாயிரம் மட்டும்) முன்வைப்புதொகை கட்ட வேண்டும். பணம் கட்டியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொண்டவர்களின் முன்வைப்பு தொகை ஏலம் முடிந்த பின் ஏலம் எடுத்தவர் தவிர மற்றவர்களுக்கு திருப்பிக்கொடுக்கப்படும்.
3. ஆரம்ப ஏலத்தொகை முதல் வருடத்திற்கு 10000/- (ரூபாய் பத்தாயிரம்) ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.
4. ஏலம் எடுப்பவர்கள் ஏலம் எடுத்த தொகையில் முதல் தவணை தொகையாக 50%தொகையை 31.12.2024 க்குள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஏலக்குழு அதிகாரிகள் முன்னிலையில் வழங்கி, இரசீது பெற்று கொள்ள வேண்டும்
5. ஏலத் தொகையை இரண்டு தவணைகளாக செலுத்தலாம். இரண்டாம் தவணை தொகையை 30.06.2025 க்குள் ஊராட்சி மன்ற செயலர் அவர்களிடம் செலுத்தி இரசீது பெற்று கொள்ள வேண்டும்.
6. ஏலம் தொடர்பான எந்த நிபந்தனையும், விதிக்கவோ, மாற்றவோ அல்லது ஏலத்தின் கால அளவினை மாற்றவோ ஊராட்சிக்கு மட்டும் உரிமை உண்டு.
7. மாவட்ட ஆட்சியர் அவர்களால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் நுழைவு கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். இவைகள் அவ்வப்போது ஊராட்சி செயல் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
8. வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை வளாகம் அமைந்துள்ள பகுதிகளில் மட்டுமே வசூல் செய்ய வேண்டும்.
9. குத்தைக்காரர் தற்காலிக செட் அமைக்கவோ, குடியிருப்பு இடமாக பயன்படுத்தவோ அனுமதிக்க இயலாது. இதர உபயோகத்திற்க்கு பயன்படுத்தப்படுமெயானால் உரிமம் ரத்து செய்யப்படும்.
10. ஏலம் எடுத்த ஏலதாரர்கள் தாங்கள் மட்டுமே நடத்த வேண்டும். உரிமையை மற்றவர்களுக்கு மாற்றி கொடுக்கவோ அல்லது உள் குத்தகைக்கு விடவோ அனுமதிக்க படமாட்டது. மீறினால் ஏல உரிமம் ரத்து செய்யப்படும்.
11. ஏலம் எடுத்த ஒப்பந்தக்காரர் இத்துறையினரால் அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்று ஒப்பந்த பத்திரம் எழுதி கையொப்பமிட்டு கொடுக்க வேண்டும். அதன் பின்னரே உரிமம் வழங்கப்படும். மேலும் ஏலதாரர்கள் தங்களது பெயர், முகவரி, முதலியவற்றை புகைப்படத்துடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயல் அலுவலரிடம் கொடுத்து அங்கீகாரம் பெற்று கொள்ள வேண்டும். அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே குத்தகை நடத்துவதற்க்கு அனுமதிக்கப்படுவர்.
12. வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு விழா, வீரசக்க தேவி ஆலய விழா நடைபெறும் இந்த இரண்டு தினங்கள் மட்டும் விலக்கு அளிக்கபடுகிறது.
13. குத்தகை எடுத்தவர்கள் குத்தகை காலத்தில் சுற்றுலா பயணிகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் வெறுப்புணர்ச்சி காட்டக்கூடாது.
14. கட்டபொம்மன் நினைவு கோட்டைக்கு வரும் அரசு துறை சார்ந்த வாகனங்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்க அனுமதியில்லை.
15. மேற்கண்ட நிபந்தனகளில் ஏதேனும் மீறப்படுமேயானல், முன்னறிவிப்பின்றி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். இதற்க்காக எவ்வித நஷ்ட ஈடும் வழங்கப்படமாட்டாது.
16.இயற்கை சீற்றரங்களினால் ஏற்படும் நிகழ்வுகளுக்கு எவ்வித நஷ்ட ஈடும் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
17. வளாகத்திற்க்குள் பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் கப் மற்றும் பாலித்தீன் பைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி செயல் அலுவலர், ஊராட்சி செயலர் அவர்களிடம் கேட்டு கொள்ளலாம்.