• vilasalnews@gmail.com

சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டுவிழா : மார்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்பு!

  • Share on

புதூர் ஊராட்சி ஒன்றியம், மெட்டில்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழாவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். 


தொடர்ந்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.


இந்நிநிகழ்வில், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்த், வெங்கடாசலம் புதூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி, புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, மெட்டில்பட்டி  ஊராட்சி மன்ற தலைவர் கதிர்காமு, ஒன்றிய அவைத்தலைவர் பொன்ராஜ், மாவட்ட பிரதிநிதி சோலைசாமி, புதூர் மேற்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேசப்பாண்டியன்,  புதூர் கிழக்கு ஒன்றிய பொறியாளர் அணி அமைப்பாளர் சூர்யா, கிளைச் செயலாளர்கள் பெரியசாமி, ஜெயசக்தி, மாரிச்சாமி, ஜெயக்குமார், மெட்டில்பட்டி சந்தனம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

புதூரில் மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடியில் மின்தடை : உங்க ஏரியா இருக்கானு பாத்துகோங்க!

  • Share on