அம்பேத்கரை அவமதித்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் புதூர் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றிய சட்ட மாமேதை அன்னல் அம்பேத்கர் குறித்து நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அவமதித்து பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டித்து புதூர் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் புதூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் பேரூர் செயலாளர் மருது பாண்டியன், முன்னாள் ராணுவ வீரர் மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதா அழகுராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதிகள் வேலுமணி, பாலகிருஷ்ணன், சோலைசாமி, வார்டு செயலாளர்கள் சுந்தரராஜ், சுந்தரமூர்த்தி, ராமர், நவரத்தினம், பன்னீர் பெருமாள், சீனிப்பிள்ளை, வார்டு உறுப்பினர்கள் வெற்றிவேலன், தினகரன், சித்ரா தொழிலதிபர் வாசுதேவன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் தங்கமுத்து, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா, புதூர் பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.