• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தொழிலாளியிடம் பணம் பறிப்பு : 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் தொழிலாளியிடம் பணம் பறித்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 


தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (45). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மடத்தூர் தனியார் எண்ணெய் ஆலை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது எதிரே 2 பைக்குகளில் வந்த 4 பேர், மாரியப்பனை வழிமறித்து அவரிடம் இருந்த ரூ.550 பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து, 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

  • Share on

தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை : போலீஸ் விசாரணை!

இந்த மழையில் தூத்துக்குடி மாநகர் எதிர்கொண்டது இதுதான் ... மேயர் ஓபன் டாக்!

  • Share on