• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் தொகுதி விவசாயிகளை பாதுகாக்க தவறும் திமுக அரசு : முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆவேசம்!

  • Share on

விளாத்திகுளம் தொகுதி விவசாயிகளை பாதுகாக்க தவறும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விளாத்திகுளம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய பகுதிகளில் வானம் பார்த்த பூமியான மானாவாரி நிலங்கள் உள்ளது. இங்கு உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், சின்ன வெங்காயம், கொத்தமல்லி, சூரியகாந்தி மற்றும் முண்டு வத்தல் உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 3 ஆண்டுகளாக பன்றிகள் மக்காச்சோள பயிரை சேதப்படுத்தி வருகின்றன.


முதலில் மக்காச்சோளத்தை மட்டும் தின்று சேதப்படுத்திய பன்றிகள், தற்போது வெள்ளைச் சோளத்தையும் தின்று அழித்து வருகின்றன. மக்காச்சோளம் மற்றும் வெள்ளைச் சோளம் பயிரிடப்பட்டுள்ள காடுகளுக்கு செல்லும் பன்றிகள் இடையே உள்ள உளுந்து, பாசி, சூரிய காந்தி உள்ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்திவிட்டு சென்கின்றன. மேலும் விவசாய நிலங்களையும் விவசாயிகளையும் பன்றிகள் தாக்கும் சம்பவங்களும்  நடந்து வருகிறது.


எனவே, பன்றிகளை கட்டுப்படுத்தவும், விவசாயிகளை பாதுகாக்கவும் வலியுறுத்தி விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் என பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், 


இந்த விவகாரம் தொடர்பாக, விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையிலான அதிமுகவினர்,  இன்று எட்டயபுரம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். 


பின்னர் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் கூறுகையில்:-


கடந்த அதிமுக ஆட்சியின் போது, விவசாய இழப்பீடு தொகை என்பது பயிரிடப்பட்ட அனைத்து ஏக்கர் நிலத்திற்கும் கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால், இந்த திமுக ஆட்சியில் 5 ஏக்கருக்கு மேல் இழப்பீடு தொகை வழங்குவது கிடையாது. அதே போல், கடந்த 3 ஆண்டுகளாக பன்றிகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும், விவசாயிகளை தாக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. எனவே, பன்றிகளை கட்டுப்படுத்தவும், விவசாயிகளை பாதுகாக்கவும் வலியுறுத்தி விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் என பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இந்த திமுக அரசு எடுக்கவில்லை. தொடர்ந்து விளாத்திகுளம் தொகுதி விவசாயிகளை பாதுகாக்க தவறி, அவர்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து எங்கள் பொதுச்செயலாளர் ஆலோசனையின்படி, மாவட்ட செயலாளர் அறிவுரையின்படி அதிமுக சார்பில் எட்டயபுரத்திலோ, மேலக்கரந்தையிலோ விவசாய பெருமக்களோடு சேர்ந்து அதிமுக சார்பில், சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

  • Share on

பெருமை கொள்ளும் தூத்துக்குடி துறைமுகம்!

தூத்துக்குடியில் தொழிலாளி வெட்டிக் கொலை : போலீஸ் விசாரணை!

  • Share on