• vilasalnews@gmail.com

குளத்தூரில் மறியல் போராட்டம் : அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் அதிரடி!

  • Share on

விளாத்திகுளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையை உடனடியாக சீரமைக்காவிட்டால் குளத்தூரில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் அதிரடி காட்டியுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த தொடர் கனமழை காரணமாக இராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடி வரக்கூடிய முக்கிய பிரதான கிழக்கு கடற்கரை சாலையில்(ECR) தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே அமைந்துள்ள வேப்பலோடையில் காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக ECR சாலை துண்டானது. 


அதுமட்டுமல்லாமல், தற்போது குளத்தூர் முதல் தூத்துக்குடி வரையில் ECR முறையான பராமரிப்பு இன்றி மிகவும் சேதமடைந்து காணப்படுவதால் போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையாக அது மாறியுள்ளது. மேலும், வேப்பலோடை அருகில் காட்டாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட சாலை தற்போது வரை முறையான வகையில் சீரமைக்கப்படாமல், பெயருக்கு ஜல்லி கற்களையும், மணலையும் கொட்டி வைத்து பாதையாகியுள்ளனர்.


இதனால் மிகவும் ஆபத்தாக இருக்கக்கூடிய இந்த சாலையை கடப்பது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சவாலாகவும், அச்சுறுத்தலாகவும் தற்போது வரை இருந்து வருகிறது. இந்த மிக முக்கியமான ECR சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் வலியுறுத்தியும், ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் ஏராளமான செய்திகள் வெளிவந்தும் தற்போது வரை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியோ, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனோ எந்தவித நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. 


இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டும் பெய்த தொடர் கன மழை காரணமாக பெயருக்கு போடப்பட்டிருந்த ஜல்லிக்கற்களும், மணலும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீதமுள்ள சிறு மண் பாதை வழியாக தான் வாகனங்கள் தற்போது சென்று வருகின்றது. 


இந்நிலையில் இன்று விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கட்சியினருடன் வந்து மிகவும் சேதம் அடைந்துள்ள ECR சாலையை பார்வையிட்டு உடனடியாக தமிழக அரசு இந்த ECR சாலையை சீரமைக்க வேண்டும் இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

  • Share on

ஒட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

டிச.,30ல் தூத்துக்குடி வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

  • Share on