• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.12.2024 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

 

2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 19.12.2024 அன்று காலை 10.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் கேட்டுக்கொண்டுள்ளார்.


விவசாயிகள் தாக்குதலுக்கு உள்ளாகி, விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்களை சேதமாக்குதல் என காட்டுப்பன்றிகளின் அட்டகாசம், மழைவெள்ளத்தால் விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகுந்து விவசாய பயிர்கள் அழுகி சேதம் என பல்வேறு பிரச்சனைகளை புதூர், விளாத்திகுளம் சுற்றுவட்டார விவசாயிகள் சந்தித்து வரும் தற்போதைய காலகட்டத்தில் நடைபெற உள்ள இந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தந்துள்ளது என்கின்றனர் விசாய பெருமக்கள்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் : ஆணையர் தகவல்!

ஒட்டப்பிடாரம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

  • Share on