தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் கிழக்கு மண்டலத்தில் நாளை (18ஆம் தேதி) புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வாரம் தோறும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நாளை 18.12.2024 புதன்கிழமை கிழக்கு மண்டல அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், பொதுமக்கள் சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்-திருத்தங்கள் குறித்து உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பயன்பெறலாம் என தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் தெரிவித்துள்ளார்