• vilasalnews@gmail.com

குண்டும், குழியுமான தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலைக்கு விடிவு எப்போது? மாவட்ட ஆட்சியர் கொடுத்த அப்டேட்!

  • Share on

கிழக்கு கடற்கரை சாலையில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது பணிகள் விரைவில் தொடங்கப்படும் என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார். 


திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி வழியாக இராமேஸ்வரம் செல்லக்கூடிய கிழக்குகடற்கரை சாலையானது முக்கிய போக்குவரத்து சாலையாகும். சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து நிறைந்தே காணப்படும். மேலும் இந்த சாலையோரம் தனியார் கம்பெனிகள், உப்பளங்கள் அதிகமாக உள்ளதால் சரக்கு வாகனங்கள் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. அதே போல இந்த ஈசிஆர் சாலை ஓரம் உள்ள கிராம மக்களுக்கும் தூத்துக்குடி வருவதற்கு இந்த கிழக்குகடற்கரை சாலையையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.


இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததாலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் காரணமாகவும் தூத்துக்குடியில் இருந்து வேப்பலோடை – தருவைகுளம் - குளத்தூர் இடையேயான கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்று காட்சியளிக்கிறது. இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துகளும் அரங்கேறி வருகின்றது. எனவே இராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் இந்த கிழக்கு கடற்கரை சாலையில், வேப்பலோடை - தருவைகுளம் இடையிலான சுமார் 10 கிமீ தூரத்திற்கு எவ்வித சீரமைப்பும் இல்லாமல் சாலை படுமோசமாக உள்ளது. மேலும் கடந்த வாரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் மேலும் சாலை பழுதடைந்துவிட்டது. ஆகவே முக்கிய வழித்தடமான ஈசிஆர் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கிழக்குகடற்கரை சாலை பயன்பாட்டு வாகன ஓட்டிகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இந்த நிலையில், கிழக்குகடற்கரை சாலை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, கிழக்கு கடற்கரை சாலையில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது பணிகள் விரைவில் தொடங்கப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் கணக்கெடுக்கும் பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டு, வேளாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விளைநிலங்கள் பாதிக்கப்பட்ட எந்த ஒரு விவசாயியும் விடுபட்டுவிடக்கூடாது என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என இன்று செய்தியாளர் சந்திப்பின் போது மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்தார்

  • Share on

தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

திடீர் பள்ளம்...பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கொடுத்த அட்வைஸ்!

  • Share on