• vilasalnews@gmail.com

தமிழக வேலைவாய்ப்பினை வடமாநிலத்தவர்களுக்கு வழங்கிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  • Share on

தமிழக வேலைவாய்ப்பினை வடமாநிலத்தவர்களுக்கு வழங்கிய மத்திய,மாநில அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகள் அனைத்தும்  வடமாநிலத்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், மத்திய அரசு என். எல். சியில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு  பெரும் அநீதி இலைக்கப்பட்டதாகவும், பொறியாளர்(GET) தேர்வை ரத்து செய்ய வேண்டும் என  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மத்திய மாவட்ட செயலாளர் கா.அகமது இக்பால் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களிலும், ரயில்வே துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தவர்கள் திட்டமிட்டே புகுத்தப்படுவதை நிறுத்தவேண்டும் எனவும், தமிழர் உரிமைகளை மீட்டெடுக்க வீறுகொண்டு எழுவோம் எனவும்,தமிழகத்தின் வளங்களை சுரண்டுவதை வேலைவாய்ப்புகளை களவாடுவதை அனுமதிக்க மாட்டோம் என கோஷங்களை எழுப்பபட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் சுலைமான், ஓட்டப்பிடரம் தொகுதி செயலாளர் ராமசந்திரன்,இஸ்லாமிய ஜனநாயக பேரவை முத்தலிப், வட்ட செயலாளர் முகமது,காயப்பட்டினம் நகர செயலாளர் அல் அமின், மற்றும் நிர்வாகிகள், பலர் ஈடுபட்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் முதல்வர் தேர்தல் பிரச்சார இடங்களை ஆய்வு செய்தார் அமைச்சர்

தமிழக அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000/ வழங்க வேண்டும்_தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஓய்வுதியர்கள் சங்கம் கோரிக்கை

  • Share on