தூத்துக்குடியில் குடும்ப பிரச்சனை காரணமாக ஷிப்பிங் கம்பெனி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் தனுஷ் மகன் அண்டோ வசந்த் (44). இவர் தனியார் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த வசந்த் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.