குளத்தூர் - தருவைகுளம் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் மழை வெள்ளத்தால் சாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மாற்று சாலையை பயன்படுத்துமாறு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர் கேட்டின் அருகே கடந்தாண்டு பெய்த கனமழையால் சுமார் 100 மீட்டர் சாலை முற்றிலும் சேதமடைந்து தற்காலிகமாக சரள் மண் கொட்டி சாலை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது குளத்தூர் கண்மாய் மற்றும் வேப்பலோடை கண்மாய் நிறைந்து அதிக அளவில் வெள்ள நீர் வந்து கொண்டிருப்பதால் ECR சாலையில் அமைக்கப்பட்டுள்ளன 2 குழாய்கள் வழியாக அதிக நீர் சென்று கொண்டிருப்பதால் சாலை சேதம் அடைந்துள்ளது. தற்சமயம் கனரக வாகனங்கள் மற்றும் கார்கள் சென்றால் சாலை உடையும் நிலையில் உள்ளது.
எனவே பொதுமக்கள் மாற்று வழியாக தூத்துக்குடி, குறுக்குசாலை, குளத்தூர், விளாத்திகுளம் சாலையை பயன்படுத்துமாறு பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.