• vilasalnews@gmail.com

மார்கழி மாத பிறப்பையொட்டி தூத்துக்குடி சிவன் கோவிலில் பூஜை நேரம் மாற்றம்!

  • Share on

தூத்துக்குடி சிவன் கோவில் என பக்தர்களால் அழைக்கப்படும் சங்கர ராமேஸ்வரர் கோவிலில் இன்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பூஜை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அன்னை பாகம் பிரியாளுடன் இருந்து அருள் பாலிக்கும் சங்கர ராமேஸ்வரர் கோவில் தனி சிறப்பு மிக்கது. தூத்துக்குடி சிவன் கோவில் என பக்தர்களால் அழைக்கப்படும் இந்த கோவிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி பூஜை நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


அதன்படி இன்று(டிச.,16)  முதல் மார்கழி மாதம் தினமும் அதிகாலை 3:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். அதிகாலை 4 மணிக்கு திருவனந்தல், அதிகாலை 5:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறும்ர காலை 8 மணிக்கு கால சந்தி, முற்பகல் 10 மணிக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் கோவில் நடை அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். இரவு 8:00 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது. வியாழன், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய மூன்று தினங்கள் மட்டும் நண்பகல் 12 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் மூதாட்டி கொலை: உறவினர் கைது!

தூத்துக்குடியில் இருந்து குளத்தூருக்கு ECR சாலையில் பொதுமக்கள் செல்ல வேண்டாம்!

  • Share on