• vilasalnews@gmail.com

எட்டயபுரத்தில் பைக் மீது கார் மோதியதில் கணவன்- மனைவி இருவர் உயிரிழப்பு!

  • Share on

எட்டயபுரத்தில் பைக் மீது கார் மோதிய விபத்தில் கணவன்- மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.


தூத்துக்குடி மாவட்டம், எட்டையாபுரம் கான்சாபுரத்தில் வசிக்கும் வெள்ளைச்சாமி மகன் கண்ணன் (38). இவர் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆன 2 மாதத்தில் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டதால் இரண்டாவதாக அதே கிராமத்தை சேர்ந்த சுந்தரி (38) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். சுந்தரி வீடு வீடாக சென்று சேலை வியாபாரம் செய்து வருகிறார்.


இந்த நிலையில், கணவன், மனைவி இருவரும் சேலை வியாபாரத்திற்காக தங்களது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலை ரோடு சிந்தலக்கரை அருகே சென்று கொண்டிருந்தபோது, திருச்செந்தூரில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் ஒன்று பைக் மீது மோதியதில் கணவன் மனைவியான கண்ணன்- சுந்தரி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 


இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எட்டையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேர் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டி சென்ற பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத் மகன் தர்ஷன்(30) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். க‌ணவன்- மனைவி விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் நடந்த பைக் விபத்தில் பெண் செவிலியர் பரிதாபமாக உயிரிழப்பு!

தூத்துக்குடியில் மூதாட்டி கொலை: உறவினர் கைது!

  • Share on