• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் நடந்த பைக் விபத்தில் பெண் செவிலியர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடியில் நடந்த சாலை விபத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார்.


தூத்துக்குடி கோரம்பள்ளம் இபி காலனியைச் சேர்ந்த ஜெகன் என்பவரது மனைவி சுகப்பிரியா ( 35 ) தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பியவர் பிற்பகல் சுமார் 1 அளவில் ஆசிரியர் காலனி மெயின் ரோடு அருகே பாளையங்கோட்டை சாலையில் வந்துகொண்டிருந்த போது, மழைநீர் தேங்கிய சாலை பள்ளத்தில் எதிர்பாரதவிதமாக கீழே விழுந்துள்ளார். அப்போது, சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த கடற்கரையாண்டி என்பவரது மகன் பாலமுகருகன் ( 44 ) என்பவர் பின்னால் வந்து கொண்டிருந்த நிலையில், அவரும் விழுந்து சுகப்பிரியா மீது மோதி விபத்திற்குள்ளானார்.


பின்னர், உடனடியாக இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுகப்பிரியா சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். பாலமுருகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Share on

சென்னையில் நடந்த அதே சம்பவம்.... உஷாரான தூத்துக்குடி மக்கள்!

எட்டயபுரத்தில் பைக் மீது கார் மோதியதில் கணவன்- மனைவி இருவர் உயிரிழப்பு!

  • Share on