வருகிற பிப்ரவரி 17 ம் தேதி, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ளார்.
இந்நிலையில், அவர் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் பகுதியான, தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில், அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிகழ்வின் போது அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.