• vilasalnews@gmail.com

சென்னையில் நடந்த அதே சம்பவம்.... உஷாரான தூத்துக்குடி மக்கள்!

  • Share on

கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கொண்டிருக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையை போல் கனமழை வெள்ளத்துக்கு பயந்து தூத்துக்குடி மக்களும் தங்களின் சொந்த கார் மற்றும் ஆட்டோக்களை மேம்பாலங்களில் நிறுத்தி உள்ளனர்.


வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென்தமிழக மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக .நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் மற்றும் அதனை சுற்றிய கிராமங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தேங்கிய தண்ணீரால் ரயில்களின் புறப்படும் இடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மழை வெள்ளநீர் வந்ததால், அதற்கு அடுத்துள்ள 3வது மைல் பகுதி மற்றும் தூத்துக்குடி மாநகருக்குள் வெள்ளம் வந்துவிடுமோ என்ன அச்சத்தில், சென்னையை போல் தூத்துக்குடியிலும் பொதுமக்கள் தங்களின் கார், ஆட்டோக்களை மேம்பாலங்களின் நிறுத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையின்போது வசிக்கும் மக்கள் வேளச்சேரி மற்றும் அதனை சுற்றிய மேம்பாலங்களில் நிறுத்தினர். அதேபோல் இப்போது தூத்துக்குடியில் வசிக்கும் மக்களும் தங்களின் கார்களை மேம்பாலங்களில் நிறுத்தினர்.

  • Share on

கோவில்பட்டி 10 வயது சிறுவனை கொன்றதாக ஆட்டோ டிரைவர் கைது... கொலைக்கான காரணம் என்ன?

தூத்துக்குடியில் நடந்த பைக் விபத்தில் பெண் செவிலியர் பரிதாபமாக உயிரிழப்பு!

  • Share on