தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த 9ஆம் தேதி மாயமான 10 வயது சிறுவன் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சடமாக கிடந்தான். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது ஆட்டோ டிரைவர் கருப்பசாமியை என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஓரினச்சேர்க்கைக்காக அழைத்து கொன்றதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினரின் 10 வயது சிறுவன் 5ஆம் வகுப்பு படித்து வந்தான். அம்மை போட்டு இருந்ததால் சம்மவத்தன்று சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்தான். இதற்கிடையே அன்று சிறுவனின் பெற்றோர் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். இதனால், வீட்டில் தனியாக இருந்த சிறுவன் தனது பாட்டியை வீட்டுக்கு வரும்படி போன் செய்து அழைத்துள்ளான்.
பாட்டி வீட்டிற்கு வந்தபோது சிறுவன் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாட்டி சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். குடும்பத்தினர் அனைவரும் சிறுவனை உறவினர், நண்பர்கள் வீடுகளிலும், அக்கம் பக்கத்திலும் தேடிப்பார்த்தனர். ஆனால், சிறுவன் கிடைக்கவில்லை. பின்னர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சிறுவனின் புகார் பெற்றோர் செய்தன.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மறுநாள் டிசம்பர் 10 இம் தேதி சிறுவன் பக்கத்து வீட்டில் உள்ள மாடியில் இறந்து கிடந்தான். சிறுவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். தொடர்ந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவனின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனால் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நேரடியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 3 அமைக்கப்பட்டது. அதோடு ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு இருந்தது. இதனால் 30 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இருந்த போலிலுல் கொலையாளியை கண்டுபிடிப்பதில் சிரமம் நீடித்தது.
இந்நிலையில் தான், இன்று சிறுவனை கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து கொன்றதும் தெரியவந்துள்ளது.
மேலும், சிறுவனை கொன்ற ஆட்டோ டிரைவர் கருப்பசாமி தன்மீது சந்தேகம் வராமல் இருக்க அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து சிறுவனை தேடிவந்ததும் தெரியவந்துள்ளது. கைதான கருப்பசாமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.