தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கனமழை பாதிப்பு காரணமாக , தூத்துக்குடி கீழுர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று ( டிச.,14 ) ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில் மாலை 5.15 மணிக்கும், சென்னை செல்லும் முத்துநகர் விரைவு ரயில் இரவு 8.25-க்கும், தூத்துக்குடி - பாலக்காடு விரைவு ரயில் இரவு 10 மணிக்கும், தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் விரைவு ரயில் இரவு 10.50 மணிக்கும் மீளவிட்டானில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.