• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் : தண்ணீரில் பயிர்கள்... கண்ணீரில் விவசாயிகள்!

  • Share on

தொடர் மழையால் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர் செடிகள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.


மானாவாரி விவசாய பூமியான புதூர் மற்றும் விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம், மிளகாய் உள்ளிட்டவைகளை பயிரிட்டு இருந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை பெய்து வருவதால், பெரும்பாலான இடங்களில் விவசாய நிலங்களில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. விளைநிலங்களில் தண்ணீர் வடியாததால் பயிர்கள் அழுக தொடங்குகிறது. 


பி.ஜெகவீரபுரம், கந்தசாமிபுரம்,  புதுசின்னையாபுரம், மாதலாபுரம், பூதலாபுரம்,  சேர்வைக்காரன் பட்டி, சங்கரப்ப நாயக்கன்பட்டி, கட்டைதலைவன் பட்டி, சென்னம்பட்டி, துரைச்சாமிபுரம், குமாரலிங்கபுரம், மாவிலோடை, சின்னூர், கே.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்கள் அழுகி சேதமடைந்தன. இதனால் பெரும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


பெரும்பாலான விவசாயிகள் தங்களது நகைகளை அடமானம் வைத்தும், கடனாக பணம் பெற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். எனவே, மழையால் சேதமடைந்த பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு, விவசாயிகளுக்கு உடனே நிவாரண உதவி வழங்க வேண்டும் விவசாயிகள்  கண்ணீர்மல்க வேதனை தெரிவிக்கின்றனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறையா? சமூக வலைதளங்களில் பரவும் போலி தகவல்!

தூத்துக்குடியில் இருந்து ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்!

  • Share on