• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகருக்குள் வெள்ள நீர் வருமா? மேயர் கொடுத்த அப்டேட்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது வருகிறது. தாமிரபரணி ஆறு, காட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது


தூத்துக்குடி மாநகரில் கடந்த 2 நாட்களாக மழை பெய்த நிலையில், இன்று அதிகாலை முதல் பெய்து வரும் மழையானது நிற்காமல் தொடர்ந்து பெய்து வருவதால், தூத்துக்குடி புறநகர் பகுதியில் மழை நீர் வரத்து அதிகமாகி கொண்டே வருகிறது.


இதனால், தூத்துக்குடி மாநகரில் வெள்ளம் ஏற்படுமா? என்ற கேள்விகளுடன் பொதுமக்கள் அச்சம் அடையக்கூடிய சூழல் ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


அதில், தூத்துக்கடி மாநகராட்சி 16, 17, 18 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். தூத்துக்குடி மாநகரின் புறநகர் பகுதிகளான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் மழை நீரானது பக்கிள் ஓடை வழியாகவே சென்று கொண்டிருக்கிறது. ஆகையால் அந்த மழை நீரின் அளவு குறைந்தவுடன் இந்த குறிப்பிட்ட வார்டுகளில் தேங்கி உள்ள மழைநீரானது அந்த பகுதிகளிலுள்ள வடிகால்களின் வழியாக பக்கிள் ஓடையை சென்று அந்தப் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரானது படிப்படியாக குறையும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பக்கிள் ஒடையின் முகத்துவாரமான திரேஸ்வரத்தில் எந்த தடையும் இல்லாமல் தற்போது வரை நீர் சென்று கொண்டிருக்கின்றது. என தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் மாற்றம் செய்யப்பட்ட வழித்தடம் விபரம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறையா? சமூக வலைதளங்களில் பரவும் போலி தகவல்!

  • Share on