• vilasalnews@gmail.com

ஸ்டெர்லைட் போராட்டதில் 15 பேரின் உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்

  • Share on

ஸ்டெர்லைட்க்கு  எதிரான போராட்டத்தில் 15 பேரின் இறந்த குடும்பங்களுக்கு தகுதி அடிப்படையில் பணி வழங்கிட கோரியும், படுகொலை அடைந்தவர்களுக்கு தியாகிகள் நினைவகம் அமைக்க கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், 

அறவழிப் போராட்டத்தில் அரசு பயங்கரவாதம் ஏவப்பட்டு 15 உயிர்கள் துடிதுடிக்க சாகடிக்கப்பட்டது. எனவே 15 பேரின் உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

உயிர் காக்க உயிர் துறந்த 15 தியாகிகளின் நினைவாக தூத்துக்குடியின் மையப்பகுதியில் நினைவகம் அமைக்கப்பட வேண்டும் எனவும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கும், உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டவர்களுக்கும் கண்துடைப்பாக இல்லாமல் கல்வித்தகுதியின் அடிப்படையில் அரசு பணி உடனடியாக வழங்கிட வேண்டும்.

போராட்டத்தின்போது தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ள 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மற்றும் ஸ்டெர்லைட் போன்ற அடர்சிகப்பு தொழிற்சாலைகளை இனிமேல் அனுமதிக்காத வகையில் சிறப்பு சட்டம் இயற்றப்பட்ட வேண்டும்  என்று கூறினார். 

  • Share on

எல்கேஜி,யுகேஜி, வகுப்புகளை திறக்க வேண்டும் நர்சரி&பிரைமரி பள்ளி சங்கம் கோரிக்கை

தூத்துக்குடியில் முதல்வர் தேர்தல் பிரச்சார இடங்களை ஆய்வு செய்தார் அமைச்சர்

  • Share on