• vilasalnews@gmail.com

திக்..திக் தூத்துக்குடி | இன்றிரவே மக்களை வெளியேற்றுங்கள் : வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்த மாவட்ட ஆட்சியர்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அதீத வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்துள்ளார்.


கடனா அணையில் இருந்து 20,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார். தாமிரபரணி ஆற்றில் ஏற்கனவே 74,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 20,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அதீத வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் இன்றிரவு வெளியேற்றப்பட வேண்டும், எனவும் அனைத்து வட்டாட்சியர்கள், காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், செயல் அலுவலர்கள் ஆகியோர் அவர்களை உடனடியாக வெளியேற்றம் செய்ய வேண்டும். 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 14.12.2024 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி; கல்லூரிகளுக்கு விடுமுறை!

விளாத்திகுளம் அருகே வீடு இடிந்து விழுந்ததில் முதியவர் காயம் : 5 ஆடுகள் பலி!

  • Share on