• vilasalnews@gmail.com

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்... தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தை காணொளி மூலம் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக அறிவுரைகளை வழங்கினார்.


தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால், தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுக்காக்களில் உள்ள ஆற்றங்கரையோர மக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.


கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளது. கோவில்பட்டி பகுதியில் 36 செ.மீ மழை பெய்துள்ளது. அந்த பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட 397 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தென்காசி, குற்றாலம், மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கிருந்து தூத்துக்குடி பகுதிக்கு 60,000 கன அடி நீர் வரும் என தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஸ்ரீவைகுண்டம், ஏரல் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 


நீர் இருப்பு குறைவாக உள்ள குளங்களில் நீரை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக முதலமைச்சர் காணொளி மூலமாக வழங்கிய அறிவுரையின்படி நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் நீர்நிலை பகுதிகளில் வேடிக்கை பார்ப்பதோ, சிறுவர்கள் மீன்பிடிப்பதோ போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம். 


தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை பெய்த மழையில் மண் சுவற்றால் கட்டப்பட்ட இரண்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஸ்ரீவைகுண்டம், ஏரல் ஆற்று கரையோரம் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், கொட்டும் கனமழையின் தாக்கத்திலிருந்து தூத்துக்குடி மாவட்ட மக்களைக் காக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள், உணவு - குடிநீர் - மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விவரங்களைக் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலமாக தொடர்பு கொண்டு கேட்டறிந்து ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

விளாத்திகுளம் அருகே ஊருக்குள் புகுந்த வெள்ள நீர் : கிராம மக்கள் அவதி!

  • Share on