• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை நிலவரம்... அதிகபட்ச மழை எங்கு தெரியுமா?

  • Share on

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாகத் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகத் தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 


இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 12.12.24 காலை 6.30 மணி முதல் 13.12.24 காலை 6.30 மணி வரை கடந்த 24 மணி வரை பெய்த மழை பொழிவு குறித்த அளவு விபரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,


தூத்துக்குடியில் 59.50 மி.மீ, ஸ்ரீவைகுண்டத்தில் 145.50 மி.மீ, திருச்செந்தூரில் 41.10 மி.மீ, காயல்பட்டிணத்தில் 105.00 மி.மீ, குலசேகரப்பட்டினத்தில் 17.00 மி.மீ, சாத்தான்குளத்தில் 64.60 மி.மீ, கோவில்பட்டியில் 364.70 மி.மீ, கழுகுமலையில் 168.00 மி.மீ, கயத்தாறில் 113.00 மி.மீ, கடம்பூரில் 156.00 மி.மீ, எட்டயபுரத்தில் 174.40 மி.மீ, விளாத்திகுளத்தில் 186.00, காடல்குடியில் 121.00 மி.மீ, வைப்பாரில் 169.00 மி.மீ, சூரங்குடியில் 127.00 மி.மீ, ஒட்டப்பிடாரத்தில் 90.10 மி.மீ, மணியாச்சியில் 76.00 மி.மீ, வேடநத்தத்தில் 51.20 மி.மீ, கீழ அரசரடியில் 42.40 மி.மீ என


மொத்தம் 2271.60 மி.மீ மழையும், சாராசரி மழை பொழிவாக 119.56 மி.மீ மழையும் பொழிந்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் அதிக பட்சமாக கோவில்பட்டி 364.70 மி.மீ மழையும், குறைந்த பட்சமாக குலசேகரப்பட்டினத்தில் 17.00 மி.மீ மழையும் பொழிந்துள்ளது குறிப்பிட தக்கது.

  • Share on

கோவில்பட்டி சிறுவன் மரணம் வழக்கு... தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

  • Share on