தமிழ்நாடு நர்சரி&பிரைமரி பள்ளி சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளை முதல்கட்டமாகவும், எல்கேஜி யுகேஜி வகுப்புகளை அடுத்தகட்டமாகவும் திறக்க வழிவகை செய்ய வேண்டும். என தமிழ்நாடு நர்சரி அண்ட் பிரைமரி பள்ளிகள் நலச்சங்கம் மாவட்ட செயலாளர் பிராங்ளின் ஜோஸ்,தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
அம்மனுவில், தமிழ்நாடு அரசு கூடிய விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தனியார் பள்ளிகளில் குறிப்பாக நர்சரி&பிரைமரி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியாளர்கள் மிகுந்த மன வேதனையுடன் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். எனவே இந்த கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் கனிவுடன் பரிசீலித்து உடனடியாக இனியும் காலம் தாழ்த்தாமல் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அம்மனுவில் கூறியிருந்தார்.
உடன் மாநில ஊடக பிரிவு தலைவர் பெரியசாமி, மாவட்ட ஊடக பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் சந்தியாகு மற்றும் தூத்துக்குடி மாவட்ட பள்ளி தாளாளர்கள் பலர் உடனிருந்தனர்.