தூத்துக்குடி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்று 12.12.2024 மிக கனமழை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காலையில் இருந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனையடுத்து, தூத்துக்குடி மாநகர பகுதியில் தற்போது பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறையின் 1800 203 0401 எண்ணை பொதுமக்கள் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சி கட்டுபாட்டு அறையின் பணிகளை மேயர் ஜெகன்பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.