• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட மக்களே... ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஓர் வாய்ப்பு!

  • Share on

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு முகாம் 14.12.2024 அன்று இரண்டாவது சனிக்கிழமை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


பொது விநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு முகாம் 14.12.2024 அன்று இரண்டாவது சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்த முகாமில், மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் சேர்த்தல் மற்றும் நீக்குதல், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல், போன்ற குறைகள் முகாமில் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. 


மேலும் மின்னணு குடும்ப அட்டைகளுக்குரிய தவறுகளில் குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் இம்முகாமில் பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் இந்த சிறப்பு முகாமில், தெரிவித்து பொதுமக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.  எனவே பொதுமக்கள் குறைகள் இருப்பின் மனு செய்து பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

  • Share on

எட்டயபுரம் அருகே வழிப்பறி : தூத்துக்குடி வாலிபர்கள் 2 பேர் கைது!

கோவில்பட்டி சிறுவன் மர்ம மரணம் : கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!

  • Share on