தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி, தாளமுத்துநகர், டி. சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (34) என்பவரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் இன்று (11.12.2024) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.