• vilasalnews@gmail.com

புதூரில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் - விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  • Share on

புதூரில் நடைபெற்ற  மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மாமன்னர் திருமலை நாயக்கர், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு, புதூர் வட்டார ராஜகம்பள மஹாஜன சங்கம் மற்றும் புதூர் வட்டார கம்மவார் சங்கம் இணைந்து நடத்திய  மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை,  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவாக நடந்தப்பட்ட இப்போட்டியில்,  பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 12 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 29 ஜோடி மாடுகளும் என, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாடுகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டி   துவக்க நிகழ்வில், புதூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுசிலா தனஞ்செயன், விளாத்திகுளம்  ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன்,

மாவட்ட கவுன்சிலரும், மேற்கு ஒன்றியச் செயலாளருமான ஞானகுருசாமி, முன்னாள் புதூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்வராஜ், நெல்லை மண்டல வேளாண் விற்பனை ஒழுங்குமுறை கூடம் உறுப்பினர் வைப்பார் செண்பகப்பெருமாள்,  மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் தனபதி, 

மாவட்ட விவசாய அணி தலைவர் சௌந்திரராஜன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச்செயலாளர் போடுசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு கிழக்கு ஒன்றியச் செயலாளர் மோகன் உள்ளிட்ட அதிமுக  நிர்வாகிகள்  மற்றும் ராஜகம்பள மஹாஜன சங்கம் மற்றும்  கம்மவார் சங்கம் நிர்வாகிகள், பொதுமக்கள், மாட்டுவண்டி பந்தய வீரர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

எல்கேஜி,யுகேஜி, வகுப்புகளை திறக்க வேண்டும் நர்சரி&பிரைமரி பள்ளி சங்கம் கோரிக்கை

  • Share on