மகாகவி பாரதியாரின் 143 வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ ஆலோசனையின் பேரில், எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில், எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள், கார்டன் பிரபு, சின்னத்துரை, கருப்பசாமி, சிவா ஜெயக்குமார், சீனா என்ற முத்துகிருஷ்ணன், சொக்கன், சிவசங்கர பாண்டியன், மூர்த்தி, செல்வி, சாந்தி, ரத்தினம் , மாவட்ட கழக நிர்வாகிகள் வேலுச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.